பக்கோசு

டேய் பக்கோசு! டேய் பக்கோசு ! என்று கத்தினான் முருகன் பண்டாரம்.பகொசு டவுசரை சரி செய்து கொண்டே ஓடி வந்தான். ”ஏன் இப்படி கத்துறீங்க சாமி? நான் இங்க தான் இருந்தேன்.”

 ”இருந்தீன காது  கேட்காதாடா? மூதேவி.இந்த இரண்டு  கொடம் தண்ணி கொண்ண்டுவா.”

 பாக்கொசு குடத்தை வாங்கிக்கொண்டு இன்றை நோக்கி ஓடினான்.பக்கோசு சிறிது மனவளர்ச்சி குன்றியவன்.அவனுக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை.அவனுடையா அப்பா அம்மா அவனுடைய சிறிய வயதிலேயே இறந்து விட்டனர்.அவனுடைய ஒரே அக்காவும் கல்யாணம் ஆகி சென்றுவிட்டாள் இவன் அந்த ஊரில் யாருடைய வீட்டிலாவது வேலைசெய்து அந்த வீட்டிலேயே சாப்பிடுவதும் விசேச தினங்களில் கோயில் பூசாரிக்கு உதவிகள் செய்து பூசாரி தரும் உணவினை சாப்பிட்டும் வாழ்ந்தது வந்தான்.

பக்கோசுவுக்கு நிறைய நிலங்கள் இருந்தன. பக்கத்து நகரத்தின் தொழில் வளர்ச்சி காரணமாக அந்த நகரத்தை சுற்றியுள்ள நிலங்களின் மதிப்பு அதிகமாயின. பகொசுவின் நிலத்தின் மதிப்பும் உயர்ந்தது .பாகொசுவின் அக்கா காரி எப்படியாவது தம்பியின் நிலங்களை அபகரித்து விட எண்ணினாள். ஊரிலிருந்த பெரிய மனிதர்கள் பக்கோசுவின் நிலையை எண்ணி அவனுக்கு உதவி செய்ய எண்ணினார்கள். அவர்கள் ஒன்று கூடி பக்கோசுவுக்கு என்ன  உதவி செய்யலாம் என்று ஆலோசித்தனர்.அக்கூட்டத்தில் இருந்த ராமசாமி ”பக்கோசுவுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டால் அவனுடைய சொத்துகளை அவன் மனைவி பார்த்துகொள்வாள்” என்றார்.   இருந்தாலும் விவரமில்லாமல் இருக்கும்  இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? என்றார்.   கூட்டத்தினரும் ஆமோதித்தனர்.    இருந்தாலும் அவனுக்கு எப்படியாவது கல்யாணம  செய்து வைத்துவிட வேண்டும் என்று ஊர் கொத்துக்காரர் கூறினார்.மற்றவர்களும் சரி என தலையசைத்தனர்.

எங்கேயோ தேடி சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் ராமனிடம் பக்கோசுவின் நிலைமையையும் அவனுடைய சொத்து மதிப்பையும் எடுத்துக்கூறி ஊர் கொத்துக்காரர் ராமனின் பெண்ணை பக்கோசுவுக்கு மணம் முடிக்க சம்மதம் வாங்கினார். ”ஐயா நான் என்னோட பொண்னை தர சம்மதிக்கிறேனுங்க ஆனா எம்பொண்ணு சம்மதிகனுமுங்க்களே!எதற்கும் வர்ற   புதன் கிளம பொண்ணு பாக்க வாங்க பொண்ணுக்கு புடுச்சா கல்யாணத்த வச்சிரலாம்” என்றான் ராமன்.

கொத்துக்காரர் இதைப்பற்றி ஊர் பொதுமக்களிடம் கூறி எப்படியாவது பொண்ணு சம்மதிக்கணும் அதற்க்கு பக்க்கோசுவை நல்லா மேக்கப் போட்டு பொண்ணு பாக்க கூட்டிக்கிட்டு போகணும் என்றார்.மக்களும் பக்கொசுவை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.பகொசுவை டவுனில் கூட்டி சென்று நன்றாக கிராப் வெட்டி புது பேன்ட் சட்டை அணிவித்து பொண்ணு பாக்க கூட்டி சென்றனர்.

பொண்ணு பாக்க செல்லும் பொது பகோசுவிடம் கொத்துக்காரர் அங்கு வந்து நல்லபடியாக   நடந்து   கொள்ள   வேண்டும் என்றும் மிக குறைவாகவே பொண்ணு வீட்டில் சாப்பிட வேண்டும் பிறகு  பொண்ணு பார்த்து விட்டு வீட்டுக்கு போகும் போது ஓட்டலில் வயிறார சாப்பிடலாம் என்றும் கூறினார் பக்கோசு அதற்கு
சரியென்று  தலையசைத்தான். பெண் பார்க்கும் படலம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றனர்.பகோசுவுக்கு பெரிய தலை வாழை இலையாய் போட்டனர். பொண்ணை விட்டே பரிமாற்ற வைத்தனர்.பகோசுவுக்கு பெண் கிடைத்த சந்தோசத்திலும் சாப்பாட்டின் ருசியிலும் சாப்பாட்டை ஒரு பிடி பிதத்தான்.பாக்கோசு வாய் நிறைய சோற்றை அள்ளி தின்பதையும் வாயை சுற்றிலும் சோறு ஒட்டியிருப்பதையும் இலையை  சுற்றி சோறு இறைந்து கிடப்பதையும் பெண் பார்த்து  அருவருப்புர்றால்.

சாப்பிட்டு முடிந்து  அனைவரும் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டனர்.கொத்துக்காரர் பொண்ணு கொடுக்க சம்மதமா? என்று கேட்டார்.பெண்ணின் அம்மா வேகமாக வெளியே வந்து ”ஏய்யா இப்படி ஒரு லூசு பயலுக்கா எம் பொண்ண கேக்குறீங்க? உங்க பொண்ண கட்டி வைக்கறது தான! எந்துருச்சு போங்க ”  என்று கத்தினாள்.

அனைவரும் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு எழுந்து நடந்தனர்.கொத்துக்காரர் பக்கொசுவிடம் ஏண்டா உனக்குத்தான் போகும் போது சோறு வாங்கிப்போடுரன்னு சொன்னனுள்ள அப்புறம் ஏண்டா அப்படி சோத்த தின்ன என்று கேட்டார்.அதற்க்கு பக்க்கொசு ”ஆமா நீங்க போகும் போது சோறு வாங்கிப்போடலைன்னா என்னா பண்றது” என்று கேட்டான். அனைவரும் விக்கித்து நின்றனர்.

பாட்டி சொல்லை தட்டாதே

 

மணமக்களுக்கு திருமணத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்படவேண்டும் என்று ஆச்சி மனோரமா கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து இதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.  மனோரமா போன்றவர்கள் இந்நாள் முன்னாள் முதல்வரளிடம் செல்வாக்கு உள்ளவர்கள் இதைப்போன்ற காரியங்களை தங்களது நட்பை பயன்படுத்தி செய்வதன் மூலம் மகள் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அடுத்த முதல்வர் நான் தான் நீதான் என்று அடித்துக்கொள்ளும் திரைப்பட சூப்பர் ஸ்டார்கள் இதுபோன்ற காரியங்களை முன்னின்று செய்தால் நன்றாக இருக்கும்.

மனோரமா வைத்துள்ள கோரிக்கையை திரு முதல்வர் கருணாநிதி அவர்கள் செயல் படுத்தினால் அது அவர் வாழ்கையில் செய்த மிகப்பெரும் புண்ணியம் மற்றும் சாதனையாக இருக்கும்.

மாற்று பாலியல் என் பார்வையில்

அப்பா! ஒருவழியாக அரசாங்கம் மாற்று பாலியலாளர்களை அங்கிகரித்துவிட்டது. ஆனால் அவர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவோ அல்லது தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொள்வதை பற்றியோ இன்னும் அரசாங்கம் சரியாக விளக்கவில்லை. நிற்க. மாற்று பாலியலாளர்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்று எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நான் சொல்ல விளைவதே இப்பதிவின் சாரம்

ஆணோ பெண்ணோ தங்களுக்கு முதன்முதலில் ஏற்ப்படும் பாலியல் தேவைகளை எப்படி நிறைவேற்றி கொள்கிறார்கள்? பதின்பருவத்திலேயே, ஒரு சிலருக்கு முன்னமே? பாலியல் ஆசைகள் உருவாகின்றன . அவ்வயதில் உருவாகும் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள தங்களுக்கு பெரும்பாலும் எதிர் பாலினங்கள் கிடைப்பதில்லை. ஆனால் அவர்கள் எவ்வகையிலாவது தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். அப்பொழுது என்ன செய்வது? அப்பொழுதுதான் அவர்கள் தங்களின் பாலியல் தேர்வுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒன்று சுய இன்பமாகவும் அல்லது தங்களின் ஒத்த பாலினங்கலாகவும்அதுஅமைந்துவிடுகிறது.உதாரணத்திற்கு பள்ளி விடுதிகள்.அங்கு ஏற்ப்படும் உறவுகள் நாளடைவில் வளர்ந்து மாற்ற முடியாததாகி விடுகிறது. பலர் தங்களுக்கு எதிர் பாலினங்கள் கிடைத்தவுடன் அந்த பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள். சிலர் அந்த பழக்கத்தில் இருந்து மீள முடிவதில்லை.ஆகவே அவர்கள் மாற்று பாலியலாலர்களாக பரிணமிக்கிறார்கள்.இதுவே உளவியல் காரணமாக இருக்கக்கூடும்.அல்லது மற்ற அனைத்துக்குமான காரணமாகவும் இருக்கக்கூடும்.

அறிவியல் பூர்வமாக இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ள அதாவது மாற்று பாலியலாளர்கள் தங்களின் ஜீன்களிலேயே அந்த தன்மையை கொண்டுள்ளார்கள் என்று.அதை ஒரு சந்தேக கண் கொண்டே பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால் ஒரு முடிவை அறிவியல் பூர்வமாக நிரூபிகப்ப்படும்தோறும் அதன் முடிவுகள் மாறிக்கொண்டே வந்துள்ளதை நாம் கவனிக்கலாம். உதாரணம் சிக்மன்ட் பிராயிட்.

எது எப்படியோ இருக்கட்டும் முதலில் எந்த பாலியளர்கள் திருமணம் செய்து கொள்ளும் முன்பும் எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் உள்ளதா என்று பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினால் பல அப்பாவிகள் குறிப்பாக பெண்களின் வாழ்க்கைகள் காப்பாற்றப்படும். அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு எவ்வளவு விலை கொடுக்கலாம் என்று யோசித்து வரும் வேளையில் அரசாங்கம் இதை கவனிக்குமா?

கோமுட்டி செட்டியாரும் வெள்ளாள கவுண்டனும்

வாங்க  செட்டியாரே என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீங்க

பின்ன என்னங்க  கவுண்டரே சந்தோசமா இல்லாம பின்ன எப்படி இருக்க முடயும்?மன்மோகன் சொன்னாப்புல செஞ்சுபுட்டாருள்ள!

அப்படி என்ன பெருசா செஞ்சுபுட்டாரு?

அதாங்க தேர்தல் பிரச்சாரத்துல நாங்க ஆட்சிக்கு வந்தா? அட மறுபடியும் ஆட்ச்சிக்கு வந்தா நூறு நாள்ல தூக்கி நிருத்திருவோமுன்னு சொன்னத செஞ்ச்சுபுட்டாருள்ள!

என்னங்க செட்டியாரே சொல்லுறீங்க?

அமாங்க அதான் சென்செக்ஸ் எட்டாயிரத்துல இருந்தது இப்ப பதினாறாயிரம் வந்திருச்சுல்ல? இந்திய பொருளாதாரம் மேம்பட்ட்ருசில்ல! சொன்ன வாக்க காப்பத்திட்டாருள்ள?

செட்டியாரே இந்த சக்கரை, பருப்பெல்லாம்…

அப்புடீனா?  அதெல்லாம் அடுத்த தேர்தல்ல  ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயா வாங்கிட்டா போச்சு!

நாயோடு நாயாக

இன்று எனது நண்பரின் அப்பா என்னை எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் யூனியன் ஆபீஸில் சென்று விதை நெல் கிடைக்குமா? என்று பார்த்து வரசொன்னார்.நான் இது வரை யூனியன் ஆபீஸ்  சென்றதில்லை. யூனியன் ஆபீஸ்  சென்ற எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காம்பவுண்டு சுவருக்கு உள்ளே உள்ள ஆபீசின் கட்டிடத்தின் நீளமான படியில் இரண்டு நாய்கள் படுத்து இருந்தன. எனக்கு ஒரு கணம் சந்தேகம் வந்து விட்டது.ஒருவேளை நான் தவறுதலாக கால்நடை மருத்துவ மனைக்குத்தான்  வந்து விட்டேனோ? என்று. பிறகு சுதாரித்துக்கொண்டு அலுவலகத்தில் விசாரித்தேன் இது யூனியன் அப்பீஸ் தானா? என்று.  ஆமாம்  என்றார்கள்.பிறகு இந்த ஆபீசின் உயர் அதிகாரி யாரென்று விசாரித்தேன் –எனக்கு இந்த மாதிரி அரசாங்க அலுவலகங்களில் உயரதிகாரிகள்  வகிக்கும் பதவிகளின் பெயர்கள் தெரியாது– அதற்க்கு ஆணையர் தான் உயர் அதிகாரி  என்று சொன்னார்கள். அந்த ஆணையரிடம் சென்று ஐயா இந்த ஆபீசிக்குள் நுழையும் படியில் இரண்டு நாய்கள் படுத்துள்ளன எப்படி ஐயா உள்ளே வருவது என்று கேட்டேன். (நீங்கள் நம்ப மாட்டீர்கள்) அந்த ஆணையர் சொன்னார்,”என்னை என்ன நாய் புடிக்க சொல்லுறியா?அந்த நாய் வருசக்கணக்கில் இங்குதான் படுத்து இருக்குது, எவனையும் கடிச்சதில்லை.எல்லோரும் கம்முனு இருக்கிறானுக உனக்கும் மட்டும் என்ன வந்தது? ஒழுங்கா போய்டு. என்று சொன்னார். நான்  ஒரு  கணம் ஆடிப்போய்விட்டேன் நான் என்ன சொன்னேன் இந்தா ஆள் இப்படி கத்துறான் என்று.நான் பக்கத்தில்   இருந்த என் நண்பனிடம் கேட்டேன் (வடிவேலு – திரும்ப திரும்ப பேசுற என்ற நகைச்சுவை காட்ச்சியில் வருவதை போன்று ) நான் சரியாத்தான பேசுறேன் என்று? அவனும் நீ சரியாத்தான் பேசுற என்று சொன்னான். பிறகு நான் சுதாரித்துக்கொண்டு இனிமே இந்த ஆணையரிடம் பேசினால் அங்கு உள்ள எல்லோரும் நம்மை  பயித்தியக்காரன்  என்று சொல்லிவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

ஒருமுறை எனது உறவினர்கள் பழனியில் தங்கத்தேர் ஓட்டுகிறோம் என்று என்னை அழைத்தார்கள். எழு மணி வாக்கில் தங்கத்தேர் சுற்றிவர தொடங்கியது மக்கள் கூட்டமாக தேரை பார்க்க ஓடினார்கள் அந்தக்கூடத்தின் மத்தியில் இரண்டு நாய்கள் அங்கும்மிங்கும் அலைந்து கொண்டிருந்தது. எனக்கு தூக்கிவாரிப்போட்டது.அந்த நாய்கள் எந்த சமயத்திலும் அவர்களை கடிக்கக்கூடும்.ஆனால் மக்கள் எந்த சொரணையும் இல்லாமல் இருக்கிறார்களே என்று நினைத்து அங்குள்ள செக்க்யூரிட்டியிடம் ,”என்னங்க சார்  இப்படி மலை மீது நாய்கள் திரிகின்றன?” என்று கேட்டேன்.அதற்க்கு அவர் சொன்னார்,” என்னை என்ன நாய் புடிக்க சொல்லுறியா?”என்று. எனக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது அதற்குள் என் நண்பர்கள் இங்கு பிரச்சனை வேண்டாம் தயவு செய்து விட்டுவிடு என்றார்கள்.

இங்கு கரூரில் எங்கு  பார்த்தாலும் நாய்கள் மயம்தான். கரூரில் மட்டுமல்ல எங்குமே இந்த நிலைமைதான் என்கிறீர்களா?.சரி நான் இந்த  நாய்களை ஒழிக்க வேண்டி கரூர் நகராட்ச்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்போனேன்.

அப்பொழுது அங்கு இருந்த பியூன் சொன்னான், ” நீங்க யாரு எங்கிருந்து வருகிறீர்கள்? ஏதாவது அமைப்பை சேர்ந்தவரா?( இந்த மாதிரி விசயங்களை சுட்டிக்காட்டுவது எதோ ஒரு சில அமைப்புகள் தான் என்றும் தனிமனிதர் யாரும் இப்படி புகார் சொல்வதில்லை என்றும் அந்த பீயுனின்  புத்தியில் பதிந்துள்ளது).

இல்லை என்றேன்

சரி நீங்கக் எந்த ஏரியா?

வெண்ணைமலை (கரூர்நகராட்ச்சிக்கு  உட்பட்டதல்ல)ஐயா நான் தினமும் கரூர் நகராட்ச்சிக்கு உட்ப்பட்ட இடத்தில் தானய்யா நடக்கிறேன் பஸ் ஏறுகிறேன் பேருந்து நிலையத்தில் கூட நாய்கள் உண்டு.

சரி அபப ஒரு இருபது பொது மக்களிடம்   கையெழுத்து பெற்ற ஒரு புகார் கடிதத்தை அளியுங்கள்.

நான் எதற்காக இருபது பேரை தேடிப்போக வேண்டும்? எனது பிரச்சனை இது

சரி அப்போ நாளை வந்து நகராட்ச்சி ஆணையரை பாருங்கள்.

அடுத்தநாள் சென்று நகராட்ச்சி ஆணையரிடம் தெரு நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க ஒரு புகார் கடிதம் அளித்தேன்.அவர் சரி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். மேலும் உங்கள் விலாசத்தை கொடுத்துவிட்டுப்போங்கள்.நாங்கள் நடவடிக்கை எடுக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என்றார்.நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனக்கு பதிலும் அனுப்பவில்லை.

இந்த நாய்களை பற்றி எவரிடமாவது புகார் கொடுக்க சென்றால் ஏதோ என் செயல் குழந்தை தனத்தை போன்றது என்றோ அல்லது நான் எதோ கொஞ்சம் மன நலம் பாதிக்கப்பட்டவன் என்றோ நினைக்கிறார்கள்.நீங்களே  கொஞ்சம் சொல்லுங்களேன் நான் மன நலம் பாதிக்கப்பட்டவனா?

பின் குறிப்பு: // மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த  வெறி நாய்கடியால் ரேப்பிஸ் நோய் தாக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளி தப்பி  ஓட்டம்// இது அண்மையில் படித்த செய்தி.

இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடு ஒன்றிற்கு செல்லும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளுக்கு அந்தந்த ஐரோப்பிய நாடுகள் விடுத்த எச்சரிக்கை என்னவென்றால் ”தெருநாய்கள் அதிகம் ஜாக்கிருதை”

ரேப்பிஸ் நோய் தாக்கினால் மரணம் நிச்சயம்

வெறி நாய் கடிக்கு அரசு மருத்துவ மனையில் போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதில்லை. தனியார் மருத்துவ மனையில் வெறி நாய் கடிக்கு போடும் ஊசி மருந்தின் விலை சில ஆயிரங்கள்

தெருவில் நாய்களை சுதந்திரமாக திரிய விடும் நாய் உரிமையாளர்கள் எப்போதும் கூறும் ஒரு செய்தி ” எங்கள்  நாய் காடிக்காது”

ஓட்டு

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
எங்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றன
குழந்தைகள் பிறக்கும் பொழுது
எங்களுக்கு சந்தோசம் தான்
அப்பொழுது எங்களுக்கு பணம் கிடைக்கும்
பரிசுகளும் கிடைக்கும் நாங்கள் வாழ்த்தப்படுவோம்
ஆனால் நாங்கள் குழந்தைகளை விற்று விட வேண்டும்
இதிலும் எங்களுக்கு சந்தோசம்தான்  ஏனென்றால்
அவர்களுக்கு ஏற்ற ஜோடிகளை பிற்காலத்தில் நாங்கள்
தேடவேண்டியதில்லை
எங்களுக்கு ஒரே வருத்தம் என்னவென்றால்
வருடா வருடம் குழைந்தைகள் பிறப்பதில்லையே என்று
அப்படி பிறந்தால் உடம்பு கெட்டு விடும்  என்று யாரோ சொன்னார்கள்
எங்கள் சந்தோசம் உடம்பில் இல்லை
பணத்திலும் பரிசுகளிலும் தான் என்பதை மறந்து.

அரசியல் பிரவேசம்

வர மாட்டேன் போ வரமாட்டேன் போ
பாதையில் குழிகள்
தலைவர்களின் மகிழ்வுந்துகள்
மலம் இரைப்பைக்கு செல்கிறது
சுவரில் தலைவர்கள் சிரிக்கிறார்கள்
பெற்றோர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்
ஆயுதமும் பணமும் நதிகள்
மூளையில் இரத்த குழாய்கள் வெடிக்கின்றன
விக்ரக வழிபாடு
பேருந்தில் ஏற முடியவில்லை
சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள்
பெரிய பெரிய மலைகள் மறைக்கின்றன
இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்னை நோக்கி
மைக் இல்லா பூச்சி நான்   
அதைப்பற்றி பேசாதே என்றனர் பெற்றோர்
பேசாமல் இருக்க முடியவில்லை என்னால்
நண்பர்களும் எதிரிகளாகின்றனர்
அதைப்பற்றி பேசினால் மட்டும்

ஆகையால் எச்சை இலையில்

எச்சை இலையில் கிடக்கிறது வாழ்க்கை
நாய்கள் இலையை நக்குகின்றன
கருங் காக்கைகள் பருக்கைகளை கொத்துகின்றன
பல்லிளிக்க தெரியவில்லை
கை நீட்ட தெரியவில்லை
கை கட்ட முடியவில்லை
ஆகையால் எச்சை இலையில்
கிடக்கிறது வாழ்க்கை

வேற்றுமையில் ஒற்றுமை

தொலைவில் இருந்து பார்த்தேன்
குல்லாவும் தாடியும் தெரிந்தன
சற்று அருகில் சென்று பார்த்தேன்
அட மனிதன்
இன்னும் நெருங்கி பார்த்தேன்
அட அது நான்தான்.

நான் கடவுள் இளையராஜா சாருநிவேதிதா ஓர் எதிர்வினை அல்லது வாசகர் கடிதம்

உயர்திரு சாரு சார் அவர்களுக்கு வணக்கம்

உங்களின் அபுனைவை மட்டுமே அதிகம் வாசித்த எனக்கு ஸீரோ டிகிரீ வாசித்து முடித்ததும் உங்களின் மீதான எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. பல விசயங்களில் உங்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகும் எனக்கு இளையராஜா பற்றிய உங்களின் கருத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.மன்னிக்கவும்.இளையராஜா பற்றிய தங்களின் கருத்துக்கு (நான் கடவுள் விமர்சனம்) என் எதிர்வினையே இது.

மேலை நாடுகளில் ஒரு இசை கலைஞன் தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்த திரைப்படத்தை நம்பி இருப்பத்தில்லை.அவனுக்கு வேறு வழிகள் உள்ளன ஆனால் தமிழ்நாட்டில் ஏன்? இந்தியாவில் கூட அப்படிப்பட்ட நிலை தான் உள்ளதா? தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு எளிய மனிதன் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுள் ஒளிந்த்திருக்கும் இசை திறமையை வெளிக்கொண்டு வர விரும்பும் பொழுது அவன் என்ன செய்ய முடியும்?அந்த நாட்டில் உள்ள இசை சூழலில் மட்டுமே இயங்க முடியும்.அவ்வாறு அவன் இயங்கும் போது அந்த சூழலே அவனை விளுங்கிக்கொள்கிறபோது அவன் அதில் மட்டுமே ஆகசிரந்தவனாக ஆக முடிகிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்தான் இளையராஜா என்னும் மாபெரும் இசைகலைஞன். தமிழ்நாட்டில் இசைஎன்றால் திரை இசை மட்டும் தான் என்ற நிலை இல்லாமல் ஆல்பங்கள் மற்றும் மேடை இசை (மேலை நாடுகளில் உள்ளது போல்) காலம் காலமாக இருந்திருந்தால் இளையராஜா திரையிசையில் தான் இருந்திருப்பாரா?. இளையராஜா ஒரு மாபெரும் இசை கலைஞன் மட்டுமே.அவருடைய இசையை சினிமாவில் எப்படி பயன்படுத்துவது எவ்வளவு பயன்படுத்துவது போன்றவற்றை திரைப்படத்தின் இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டுமேயொழிய இசை கலைஞன் அல்ல.

மூன்று ஆண்டுகளாக நான் கடவுள் என்ற திரைப்படத்தை எடுத்த பாலா ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கிய பாலா ஏன் படத்திற்கு எதிராக துருத்திக்கொண்டிருக்கும் இசையை வெட்டி விட நினைக்கவில்லை? ஏனென்றால் பாலாவே தான் ஒரு மசாலா படம் எடுக்கிறோமா அல்லது கமர்சியல் படம் எடுக்கிறோமா? அல்லது தீவிர சினிமா எடுக்கிறோமா என்ற ஒரு குழப்பமான நிலையில்தான் இருக்கிறார். சரி அகிரா குரோசோவா மற்றும் பனுவல் போன்றோரின் சினிமாக்களைப் போல் உலகத் தரத்தில் எடுக்கத் தெரிந்த பாலாவுக்கு ஏன் environment sound மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லை?

சரி அதே இளையராஜா அகிரா குரோசோவின் படத்திற்கு இசை அமைத்திருந்தால் அகிரா குரோசோவா இளையராஜாவின் இசையை எப்படி பயன்படுத்தியிருப்பார்? அல்லா ரக்கா ரஹ்மான் ரஜினி (இங்கு ராமராஜன் ரஜினியாகிறார்) படங்களுக்கு எப்படி இசை அமைத்துள்ளார்.

சரி அதென்ன ராமராஜனின் கரகாட்டகாரன்? கரகாட்டகாரனின் இயக்குனரின் பெயரை மறந்து விட்டீர்களா? ஒரு சினிமாவிற்கு பாடல்கள் வேண்டுமென்று நினைக்கிறீர்களா? ஒரு சினிமாவின் பின்னணி இசை மற்றும் தவிர்க்க முடியாமல் பாடல் வேண்டுமென்றால் அதன் இசை அந்த திரைப் படத்தில் கதை நிகழும் பிராந்தியத்தின் வாத்தியக் கருவிகளின் இசை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் படத்தின் தன்மை கெடாமல் இருக்கும். ஆஸ்கார் விருதுதான் சினிமாவிற்கு தரப்படும் ஆகச் சிறந்த விருதா? மரணம் ஒரு புதிர். அதைப் பார்த்து அஞ்சாதவர்கள் இந்த உலகத்தில் இருந்ததில்லையா? அவர்கள் அதை விருப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லையா? ஏன் மரணத்தை ரொமான்டிக்காக பார்க்க கூடாதா? காசியில் எரிக்க படும் பிணத்தின் ஆத்மா இறைவனை அடையும் என்ற நம்பிக்கையினால் அதை ரொமான்டிக்காக இளையராஜா பார்த்திருக்க கூடாதா?

 உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத இளையராஜாவின் இசையை உண்மையிலேயே நீங்கள் கேட்காமல் விட்டிருப்பீர்களேயானால் நீங்கள் ஒரு மிகச் சிறந்த இசை அனுபவத்தை தவற விட்டுள்ளீர்கள் என்பது ஏன் தாழ்மையான கருத்து.

« Older entries