சூபி ஞானி சக்கர பாவா

இந்து மதத்தில் சித்தர்கள் பல சித்து வேலைகள் செய்ததை பற்றி .
கேள்விபர்றிருப்போம். 18 சித்தர்களைப்பர்ரியும் கேட்டிருப்போம். அவர்களின் சமாதிகளை தரிசிக்க நாம் மிகவும் விரும்புவோம்.

இஸ்லாம் மதத்திலும் அதைப்போல் ஞானிகள் இருந்தார்கள். அவர்களை சூபிக்கள் என்று அழைத்தார்கள். அவர்கள் பல சித்து விளையாட்டுக்களின் மூலம் பல நன்மைகளை மக்களுக்கு செய்து வந்தனர், மட்டுமல்லாமல் இஸ்லாமிய மதத்தையும் பரப்பி வந்தனர்.

அப்படி ஒரு எண்ணூறு வருடங்களுக்கு முன்னாள்
ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு சூபி ஞானிதான் சக்கர பாவா. 

இவர் வட இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பிவிட்டு தென்னிந்த்தியாவிர்க்கு வந்தார்.தமிழ் நாட்டிற்கு வந்து ஒட்டன் சத்திரம் பக்கமுள்ள குழிப்பட்டியில் அடங்கியுள்ளார். பின் வருவது இவரின் கதை.

ஒரு முறை பாவா ஒரு மரத்தின் அடியில் பகிர் போன்ற தோற்றத்துடன் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவ்வழியே மாட்டு வண்டியில் கிராம மக்கள் சந்தைக்கு சர்க்கரையை கொண்டு சென்றார்கள். அப்போது பாவா அவர்களை பார்த்து கேட்டார்,”வண்டியில் என்ன கொண்டு செல்கிறீர்கள்? என்று. அதற்கு கிராம மக்கள் பாவாவின் தோற்றத்தை பார்த்து முகம் சுளித்து யார்ரா இவன் ? நம்மை கேள்வி கேட்கிறான் பிச்சைக்காரன் என்று எண்ணி “இம், வண்டியில மண்ணையும் மயிரையும் எடுத்துகிட்டு போறோம்.” என்றனர். பாவ சிரித்துக்கொண்டார்.

சந்தையில் சென்று மக்கள் வண்டியில் இருந்த மூட்டைகளை பிரித்த போது சக்கரைக்கு பதில் மண்ணும் மயிரும் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் பாவாஇடம் ஒடி வந்தனர். பாவா என்ன என்று கேட்டார் . மக்கள் நடந்ததைக்கூறி மன்னிப்பு கேட்டனர். பாவா அவர்களை மன்னித்து ஆசீர்வதித்தார். மக்களை இப்போது சென்று காணுமாறு கூறினார். மக்கள் சென்று பார்த்தனர். மண்ணும் மயிருமாக இருந்தது மீண்டும் சக்கரையாக மாறி இருந்தது. அதிலிருந்து மக்கள் பாவாவை சக்கரை பாவா என்று அழைக்கலாயினர்.

பாவா அப்பகுதி மக்களிடம் இஸ்லாம் மதத்தை பரப்பியும் மக்களின் குறைகலை தனது சக்தியால் கலைந்தும் வாழ்ந்தார். நீண்ட நாட்கள் வாழ்ந்து குளிப்பட்டியிலீயே அடைந்தார்.மண்ணும் மயிருமாக உள்ள நம் வாழ்க்கை சக்கரையாக இனிக்க பாவாவிடம் வேண்டிக்கொள்வோம்.

குறிப்பு  : குலிப்பட்டி கரூரிலிருந்து பழனி செல்லும் வழியில் ஒட்டன் சத்திரம் பக்கத்தில் குலிப்பட்டி உள்ளது.