சுந்தர ராமசாமியும் ராஜயோகமும்

முதலில் ராஜயோகம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.ராஜ யோகம் என்பது பெயருக்கு ஏற்றார்போல ராஜ வாழ்வு கிடைப்பது ஆகும்.

ராஜ வாழ்வு உங்களுக்கே தெரியும். தங்கத்தட்டில் சோறு போக ஏசி காரு என்பார்களே அது போலத்தான். ராஜயோகம் அடித்தவர்களிடம் பணம் இருக்கும் புகழ் இருக்கும் ஆள் அம்பு இருக்கும் . ஆனால் தீவிர வாசிப்போ அல்லது தீவிர படைப்பார்றலோ இருக்காது. எனக்கு தெரிந்து தொன்நூர்றோன்பது ராஜயோகசாளிகளுக்கு  இதைப்போல நடந்துள்ளது. நான் சொல்வது உண்மையான ராஜயோக படைப்பாளியை. சும்மா காசு கொடுத்து வாங்கிய கதை கவிதைகளை தன்னுடைய பெயரில் போட்டுக்கொள்ளும் ஜென்மங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

தீவிர படைப்பாளிகளை மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன். ராஜயோகம் உள்ள  மிக சொற்பமானவர்களே இலக்கியத்தை ரசிக்க வேண்ண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஆவார்கள்.மீதி பேர்வழிகள் இலக்கியமா அப்படின்னா?என்று கேட்க கூடியவர்கள்.

ராஜயோகம் உள்ளவர்களில் மிக தீவிரமான படைப்பாளிகளை ராஜயோகம் அடித்தவர்கள் என்று சொல்லி மட்டும்  நிறுத்தாமல் அவர்கள் ராஜயோகம் கிடைத்தர்களுக்கும் மேலானவர்கள், சொல்லபோனால் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று தான் சொல்லவேண்டும். எனக்கு தெரிந்து சுந்தர ராமசாமி அத்தகையவர் ஆவார். அவர் அத்தகையவர் தானா? என்பதை பால சரஸ்வதி தான் சொல்ல வேண்டும்.இங்கு நான் கருணாநிதியையோ அல்லது மற்ற குப்பை எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் அது சுந்தர ராமசாமிக்கும் அவரது படைப்பாற்றலுக்கும்  நான் செய்யும் தீங்கு ஆகும்.

சூபி ஞானி சையது பாசுமியான் அவுலியா

 சூபி ஞானிகளின் தேடல்களின் வரிசையில் அடுத்து நான் தேடிக் கண்டடைந்ததுஞானி சையது பாசுமியான் அவுலியா ஆவார்கள்.அவரை மஸ்தான் என்றும் அழைப்பது உண்டு.

அவர் கரூரில் மாவடியான் கோவில்  தெருவில் அடங்கியுள்ளார்கள். ஒரு முப்பது வருடங்களாக கரூரிலேயே இருக்கும் எனக்கு இந்த பாவாவை பற்றி தெரியாமலிருந்தது. நண்பர் ஷேக் அவர்களின் மூலமே நான் பாவாவை அறியமுடிந்தது. நண்பர் ஷேக் அவர்களுக்கு எனது நன்றி. 

ஆடிக்கார்று அடிக்கும் மாலை நேரத்தில் வியாழக்கிழமை  ஒன்றில்  தர்ஹாவிர்க்கு நானும் நண்பர் கார்த்தியும் ஊதுபத்தி , நாட்டு சக்கரை , பொட்டுக்கடலை எலுமிச்சம்பழம்  ஆகியவைகளை தர்ஹாவிர்க்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் வாங்கிக்கொண்டு சென்றோம்.  தர்ஹா ஒரு சின்ன சாந்தினுள் ஒரு வீட்டை போல இருந்தது.  நானும் நண்பர் கார்த்தியும் தர்ஹாவில் நுழைந்ததும் எங்கும் ஊதுபத்தி வாசனை நிரம்பியிருந்தது.

ஒரு வயதான பெண்மணி தொழுகையில் ஈடுபட்டு இருந்தார்.  பாவாவின் சமாதியின் மீது பச்சை துணி போர்த்தி மூடப்பட்டு இருந்தது, சமாதியின் மீது வாள் வைக்கபட்டிருந்தது.நாங்கள் பாவாவின் சமாதியின் முன்பு அமர்ந்திருந்தோம்.அப்போது அந்த வயதான பெண்மணி தொழுகையை முடித்துவிட்டு  வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது நாங்கள் பாவாவின் திருவிளையாடல் கதை ஒன்றை அப்பெண் சொல்லக்கேட்டோம்.

சுமார் ஒரு முன்னுரு வருடங்களுக்கு முன்பு கரூர் மாவடியான் கோவில் தெருவில் மகான் சையது பாசுமியான் அவுலியா அவர்கள் வாழ்ந்து வந்ததாக சொன்னார் . அவர் பல சித்து வேலைகள் மூலம் மக்களின் குறைகளை தீர்த்துவந்துள்ளார்கள்

பாவா ஒருமுறை நாமக்கல்லில் உள்ள உறவினர்களை காண செல்லும்போது பரிசல் காரன் அவரை காசு இல்லாமல் பரிசலில் ஏற்ற மறுத்து விட்டானாம். மட்டுமல்லாமல் பாவாவை திட்டிவிட்டும் பரிசலை ஓட்டிசென்று விட்டானாம்.

அப்போதோ நடு ஆற்றில் பரிசல் ஒரு சுழலில்சிக்கிகொண்டது மக்கள் கதறுகிறார்கள் பரிசல் காரன் நீந்தி தப்பித்துவிட்டான். இதனை அறிந்த பாவா தண்ணீரின் மீது நடந்து சென்று மக்களை மீட்டார்களாம். மக்களின் அடியிலிருந்து பரிசல் காரனையும் மீட்டாராம். அதனை போல பாவா நம்மையும் இந்த வாழ்க்கை என்னும் சுழலில் இருந்து காப்பாற்றுவாராக..    .

அதிர்ஷ்ட்டசாலிகளும் தூய்மையான மேடையும்

திருடவில்லை;கைப்பற்றினார்கள்.நமது
மூதாதையர்கள் இதற்காக இரத்தம் சிந்தினார்கள்.
அதனால் தான் போலும் பூமி இவ்வளவு
கறுப்பாக இருக்கிறது .

அண்மையில் கரூரில் நடந்த ஒரு புத்தக வெளயீட்டு விழாவிற்கு என்னை பேச அழைத்திருந்தனர். எனக்கு எப்போதுமே ஒரு விழாவிற்கு செல்லும் பொழுது மேடை தூய்மையானதாக இருக்க வேண்டுமே என்று படபடப்பாக இருக்கும்.பல முறை மேடை அசுத்தமானதாக இருக்கும்.பல முறை மேடை தூய்மையானதாக இருக்கும்.

அதை போல புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்த பொழுது மேடை மிகவும் தூய்மையானதாக இருந்தது.எனக்கு மகிழ்ச்சியாக  இருந்தது.எந்த துர்நாற்றமும்
இல்லாமலிருந்தது. இதனால் எந்த சங்கோஜமும் இல்லாமல் என்னால் மேடையில் அமரமுடிந்தது.புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது. பிறகு என்னை பேச அழைத்தார்கள்.

 நான் பேச்சை பின் வருமாறு துவக்கினேன்,” இந்த தூய்மையான மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும், மற்றும் இவ் விழாவிற்கு வருகைத்தந்த அதிர்ஷ்ட்டசாளிகளுக்கும் வணக்கம்” என்று.

அனைவரும் நினைத்தனர் ” இவர் அதாவது நான் மேடை தூய்மையானதாக உள்ளது என்பதற்காகவும் இந்த அறிய நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால் நம்மை அதிர்ஷ்ட்டசாலிகள் எனவும் இவர் கூறுகிறார்” என்று

நான் கூறினேன் ,” நீங்கள் இந்த மேடை சுத்தமானதாக உள்ளது என்பதனாலும் இந்த அரிய விழாவிற்கு வந்ததனாலும் தான் இவர் இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்துக்கொண்டால் அது தவறு

அதிஷ்ட்டசாலிகளும் தூய்மையான மேடையும் இதற்க்கு மேற்சொன்னது அர்த்தம் ஆகாது. இதற்க்கு அர்த்தத்தை நான் இங்கு கூறமாட்டேன்.இதற்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் நீங்கள் என் வலைப்பூவிர்ர்க்கு வந்து பாருங்கள். அர்த்தம் அங்கு உள்ளது.

அதற்கான விளக்கம் இப்போது தருகிறேன்.அதிர்ஷ்ட்ட சாலிகள் என்பதற்கு அர்த்தம் அவ்வரிய விழாவிற்கு வந்ததினால் அல்ல. பின் என்ன என்றால், நம் கேடு கெட்ட ஊழல் நிறைந்த அரசியல் வாதிகளால்நாம் தினமும் செத்து செத்து பிழைக்கிறோம். சாலையில் வரும்பொழுது ஏற்படும் பொகுவரரத்து நெரிசலில் சிக்கி மாண்டு போகாமலும் தெரு நாய்கள் கடிக்காமலும் அல்லது நம் வாகனத்தில் நாய்கள் வந்து விழுந்து நம்மை விபத்துக்குள்ளாக்காமலும் இவ்வாறு நடக்காமல் ஒரு இடத்திற்கு நாம் பத்திரமாக பொய் சேர நமக்கு அதிர்ஷ்ட்டம் தேவைப்படுகிறது.இந்த அதிர்ஷ்டம் என்பது நமது பகுத்தறிவுக்கு ஏற்புடையதா? அல்லவா? என்பதல்ல நமது தற்போதைய விளக்கம்.பின் என்னவென்றால் அதிர்ஷ்ட்ட சாலிகள் என்பதை விளக்க மாட்டும்தான்.இதனால் தான் நான் அங்கு வந்து இருந்தவர்களை அதிர்ஷ்ட்டசாலிகள்  என்றேன்
மற்றொன்று தூய்மையான மேடை . இது என்னவென்றால் ” அரசியலை நாம் என்ன சொல்கிறோம்? அது ஒரு சாக்கடை என்று தானே? சாக்கடையில் என்ன இருக்கும் பன்றிகள் தானே இருக்கும். ஆனால் அந்த மேடையில் ஒரு பன்றிகள்  கூட இல்லை அதாவது ஒரு அரசியல் வாதிகள் கூட இல்லை. அதனால் தான் தூய்மையான மேடை என்று அன்று கூட்டத்தில் பேசினேன்.

இப்பொழுது புரிகிறதா?அதிர்ஷ்ட்டசாளிகளும் தூய்மையான மேடையும் என்பதற்கான அர்த்தம்.

பங்குசந்தையும் ஆடித்தள்ளுபடியும்

 The maximum pessimism is right time to buy.
 The maximum optimism is right time to sell.

 

 ” வாங்கவும்  விற்கவும் கற்றுக்கொள் ”
   என்ற கோஷம் வந்ததென்னவோ உண்மைதான்!
   நாம் வாங்கவும் விற்கவும் ஆரம்பித்தோம் ;
   நாம் கற்றுக்கொண்டோம்.

 

 

செல்லமுத்து குப்புசாமி நகைசுவைக்காக சொல்வார்.

 ” என்னங்க துணிக்கடையில ஆடி தள்ளுபடின்னா மக்கள் ஒடி ஒடி வாங்குகிறார்கள். பங்கு சந்தையில் விலை குறைந்து இருந்தால் மட்டும் மக்கள் வாங்க தயங்குகிறார்கள்.” என்று.

உண்மைதான் மக்கள் தங்கள் அறியாமையினால் பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்து பின்பு விழி பிதுங்குகிறார்கள்.

 

வளத்தப்ப செட்டியார் தன் தனவணிகன் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்எதையும் புரிந்து கொண்டு செய்ய வேண்டும்என்று.உண்மைதானே.பெண் பார்க்க போனால் அப்பெண்ணின் குளம் கோத்திரம் முதல் பார்க்கிறோம்    அது போல பங்கு வாங்கும் போதும் பங்குகள் குறித்தும் அதன் விலை குறித்தும் அலசி ஆராய வேண்டாமோ? பங்குகளின் விலை உயர்கிறது என்ற உடன் இத்தனை நாள் எதையோ இழந்தவர்களை போல அல்லவா ஒடி சென்று பங்குகளை ஆராயாமல் வாங்குகிறோம். அப்படி அல்லாமல் சில சிறிய ஆராய்ச்சிசிகளை பங்கு சந்தை குறித்தும், நிறுவனங்கள் குறித்தும் செய்ய வேண்டியுள்ளது.

 

 நிறுவனத்தின் விலையையும் ,பங்குசந்தை குறித்தும் ஆரயிசிகளை எப்படி செய்ய வேண்டும் என்று பெஞ்சமின் கிரகாம் கூறியுள்ளார்.திரு. கிரகாம் அவர்கள் திரு. வாரன் பபட் அவர்களின் ஆசான் ஆவார்.அந்த தத்துவத்தை பற்றி அறிய திரு . செல்லமுத்து குப்புசாமி எழுதியஇழக்காதேபுத்தகத்தை பணம் கொடுத்து வாங்கிபடியுங்கள்.

 

பெஞ்சமின் கிரகம் கூற்றுபடி கீழ்கண்ட நிறுவனங்களை கீழ்கண்ட விலைகளில் வாங்கலாம்.

 

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்ஜூன்) சோப்பு , டிடர்ஜண்டுகள், பற்பசை, சாம்பூ, உள்ளிட்ட அன்றாடம் பயன்படும் நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனக்களின் நிகர இலாபம் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டை காட்டிலும்

18 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெயவித்து உள்ளனர்.இன் நிறுவனக்களால் ஈட்டப்படும் வருவாயும் 16 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்க படுகிறது. இதே போன்று மருந்து துறை நிறுவனங்களின் வருவாயும் நிகர லாபமும் சிறப்பான அளவில் முன்னேற்றம் அடையும் என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.  மூலப்பொருள் விலை அதிகரிப்பால் நிறுவனங்களின் உற்பத்தி செலவு உயர்ந்து வருகிறது .

 

இத்தனை எதிர் கொண்டு லாப வரம்பை உயர்த்துவதற்காக நுகர்பொருள் நிறுவனக்கள் நுகர்பொருள் விலையை உயர்த்தியுள்ளன.இந்த விலை உயர்வை வடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுதல் உள்ளிட்ட சந்தைபடுத்துதல் உள்ளிட்ட சந்தை படுத்துதல் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொண்டுள்ளன.செயல்பாட்டு செலவினத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளன.இது போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணை

விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் நுகர்பொருள் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நன்றாக இறுக்கம் என எதிர்பார்க்கபடுகிறது.

 

 இதே போன்று இந்திய மருந்துத்துறை நிறுவனங்களால் ஈட்டப்படும் நிகரலாபமும் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் சென்ற ந்தியான்டின் முதல் காலாண்டில் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டிக்காடிலும் 17.5 சதவீதம் அதிகரிக்கும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

 

மருந்து துறை நிறுவனக்கள் ஏற்றுமதி மூலமே 50 சதவிகிதம் லாபம் ஈட்டுகின்றது .  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியபன மதிப்பு 6 சதவீதம் சரிவடைந்து உள்ளது. மருந்து துறை நைருவனக்களின லாபம் அதியாரிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு  சான்று. இதே போன்று உள்நாட்டு சந்தியிலும் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும் என்று நம்ம்பபடுகிறது. இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் மருந்துகளை அறிமுகம் செய்ய கிடைத்த உரிமங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இனி நிறுவனத்த்தின் விலையும் நிறுவனங்களும். 

 

இவை அனைத்தும் நீண்டகால முதலீட்டுக்காக

 

நிறுவனம்                            வாங்கும் விலை

 

HUL                                                     75 TO 100

 

ITC                                                      50  T 60

 

SUN PHARMA                                   275 TO 300

 

CIPLA                                                 60 TO 75

 

மேற் சொன்ன விலைகள் வந்தால் வாங்குங்கள் இல்லை எனில் விட்டுவிடுங்கள்.

 

மேற் சொன்னவை அனைத்தும் எனது யூகம்.முதலீட்டாளர்கள் தாங்கள் சொந்தமாக முடிவேடுத்துக்கொள்ளவும்.  

சூபி ஞானி சக்கர பாவா

இந்து மதத்தில் சித்தர்கள் பல சித்து வேலைகள் செய்ததை பற்றி .
கேள்விபர்றிருப்போம். 18 சித்தர்களைப்பர்ரியும் கேட்டிருப்போம். அவர்களின் சமாதிகளை தரிசிக்க நாம் மிகவும் விரும்புவோம்.

இஸ்லாம் மதத்திலும் அதைப்போல் ஞானிகள் இருந்தார்கள். அவர்களை சூபிக்கள் என்று அழைத்தார்கள். அவர்கள் பல சித்து விளையாட்டுக்களின் மூலம் பல நன்மைகளை மக்களுக்கு செய்து வந்தனர், மட்டுமல்லாமல் இஸ்லாமிய மதத்தையும் பரப்பி வந்தனர்.

அப்படி ஒரு எண்ணூறு வருடங்களுக்கு முன்னாள்
ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு சூபி ஞானிதான் சக்கர பாவா. 

இவர் வட இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பிவிட்டு தென்னிந்த்தியாவிர்க்கு வந்தார்.தமிழ் நாட்டிற்கு வந்து ஒட்டன் சத்திரம் பக்கமுள்ள குழிப்பட்டியில் அடங்கியுள்ளார். பின் வருவது இவரின் கதை.

ஒரு முறை பாவா ஒரு மரத்தின் அடியில் பகிர் போன்ற தோற்றத்துடன் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவ்வழியே மாட்டு வண்டியில் கிராம மக்கள் சந்தைக்கு சர்க்கரையை கொண்டு சென்றார்கள். அப்போது பாவா அவர்களை பார்த்து கேட்டார்,”வண்டியில் என்ன கொண்டு செல்கிறீர்கள்? என்று. அதற்கு கிராம மக்கள் பாவாவின் தோற்றத்தை பார்த்து முகம் சுளித்து யார்ரா இவன் ? நம்மை கேள்வி கேட்கிறான் பிச்சைக்காரன் என்று எண்ணி “இம், வண்டியில மண்ணையும் மயிரையும் எடுத்துகிட்டு போறோம்.” என்றனர். பாவ சிரித்துக்கொண்டார்.

சந்தையில் சென்று மக்கள் வண்டியில் இருந்த மூட்டைகளை பிரித்த போது சக்கரைக்கு பதில் மண்ணும் மயிரும் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் பாவாஇடம் ஒடி வந்தனர். பாவா என்ன என்று கேட்டார் . மக்கள் நடந்ததைக்கூறி மன்னிப்பு கேட்டனர். பாவா அவர்களை மன்னித்து ஆசீர்வதித்தார். மக்களை இப்போது சென்று காணுமாறு கூறினார். மக்கள் சென்று பார்த்தனர். மண்ணும் மயிருமாக இருந்தது மீண்டும் சக்கரையாக மாறி இருந்தது. அதிலிருந்து மக்கள் பாவாவை சக்கரை பாவா என்று அழைக்கலாயினர்.

பாவா அப்பகுதி மக்களிடம் இஸ்லாம் மதத்தை பரப்பியும் மக்களின் குறைகலை தனது சக்தியால் கலைந்தும் வாழ்ந்தார். நீண்ட நாட்கள் வாழ்ந்து குளிப்பட்டியிலீயே அடைந்தார்.மண்ணும் மயிருமாக உள்ள நம் வாழ்க்கை சக்கரையாக இனிக்க பாவாவிடம் வேண்டிக்கொள்வோம்.

குறிப்பு  : குலிப்பட்டி கரூரிலிருந்து பழனி செல்லும் வழியில் ஒட்டன் சத்திரம் பக்கத்தில் குலிப்பட்டி உள்ளது.

ஏன் அப்படி பாக்குறே?

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி என்னை அச்சமடைய செய்தது.என்னவென்றால் கோயமுத்தூரில் ஒரு மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் 18 வயது இளைஞனும் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.  அவர்கள் என்னுடன்  மனநோய் மருத்துவரிடம் ஆலோசனைக்காக காத்திருந்தவர்கள். அப்போது 35 வயது மதிக்கத்தக்க மல்கோவா ஆண்டிகள் எங்களை கடந்து சென்றனர். அந்த இளைங்ககனும் நானும் அந்த மாது சிரோன்மணிகளை பார்த்தோம் . மறுபடியும் ஒருமுறை திரும்பி பார்த்தோம். பெரியவர்  இதைக்கவனித்து அந்த பையனிடம் ஏன் அப்படி பாக்குற? என்றார். அதற்கு அந்த பையன் பேந்த பேந்த முழித்தான். வேர்த்து விறுவிறுத்து விட்டான்.அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்து நின்றது அதில் அவர்கள் ஏறி சென்றுவிட்டார்கள்.

 

 ஆனால் அப் பெரியவர் கேட்ட கேள்வி என்னிடம் நின்று கொண்டிருந்தது. அக் கேள்வியிடம் நான் கேட்ட கேள்வி என்னவென்றால்ஏன் ஒரு வயதுக்கு வந்த இளைஞன் தன் உடல் அமைப்பு ஏற்படுத்தும் தூண்டல்களுக்கு ஏற்ப செயல் பட கூடாதா?  என்ன நம் கலாசாரம் , என்ன நம் பண்பாடு? அவன் என்ன கொலையா செய்தான்? பெண்ணைத்தானே ரசித்தான். கற்பு? அழிக்கவில்லையே.  அபெரியவர் ஏன் அப்படி கடிந்து கொண்டார்?அவன் அவனுடைய வழிப வயதில் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகத்தானே செய்தான்.இச் சிர்ரோன்மநிகளை சைட் அடிக்காமல் இருந்திருந்தால் தானே அப் பெரியவர் கவலை பட்டிருக்கவேண்டும். அவனை மருத்துவ பரிசோதனைக்கு உட் படுத்தியிருக்க வேண்டும்.

 ஹார்மோன் சரியாக வேலை செய்கிறதா? என்று பார்க்க.

 

ஆனால் நம் கலாசாரம் எப்படி ஒரு சராசரி மனிதனை அவன் இயல்புகளை கட்டுப்படுத்துகிறது. இக் கட்டுப்படுத்தல்களால்தானே மன நோயும் பாலியல் வக்கிரங்களும் தோன்றுகிறது.

 

ஹார்மோன் சரியா வேல செய்யுது வாலிப வயசு சைட் அடியுங்கள் தப்பில்லை. நம் கலாச்சாரம் ஒன்றும் தேய்ந்துவிடாது.   

பாலியல் குட்டி கதைகள் முன்னுரை

 பாலியல் தொடர் கதை ஒன்று எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.இது நிச்சயமாக முகம் சுளிக்க வைக்காது. நம்பலாம். இது நிச்சயமாக அனைவரும் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று நம்புகிறேன் .இக் கதை ஒரு சுயசரிதை வடிவில் இருக்கும் ஆனால் சுயசரிதை அல்ல. யாருடைய சரிதையும் அல்ல. இது உண்மை கதை அல்ல. ஆனால் கற்பனைகதையும் அல்ல . இது கற்பனைக்கதை அல்ல . ஆனால் உண்மைகதையும் அல்ல. இரண்டும் கலந்தது.வாசியுங்கள் பயம் கொள்ளாதீர்கள், திட்டாதீர்கள், அனுபவியுங்கள்.

 இது பாலியல் வக்கிரங்கள் , ஆசைகள், அனுபவங்கள் , தேடல்கள் அனைத்தையும் சொல்லும் என்று எண்ணுகிறேன். நன்றி.

அறிவிப்பு ( பின் நவீன கவிதை )

பங்களா கேட் முன்பு
கார்வரும்

வாகனங்களை நிறுத்தாதீர்.