ஏன் அப்படி பாக்குறே?

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி என்னை அச்சமடைய செய்தது.என்னவென்றால் கோயமுத்தூரில் ஒரு மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் 18 வயது இளைஞனும் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.  அவர்கள் என்னுடன்  மனநோய் மருத்துவரிடம் ஆலோசனைக்காக காத்திருந்தவர்கள். அப்போது 35 வயது மதிக்கத்தக்க மல்கோவா ஆண்டிகள் எங்களை கடந்து சென்றனர். அந்த இளைங்ககனும் நானும் அந்த மாது சிரோன்மணிகளை பார்த்தோம் . மறுபடியும் ஒருமுறை திரும்பி பார்த்தோம். பெரியவர்  இதைக்கவனித்து அந்த பையனிடம் ஏன் அப்படி பாக்குற? என்றார். அதற்கு அந்த பையன் பேந்த பேந்த முழித்தான். வேர்த்து விறுவிறுத்து விட்டான்.அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்து நின்றது அதில் அவர்கள் ஏறி சென்றுவிட்டார்கள்.

 

 ஆனால் அப் பெரியவர் கேட்ட கேள்வி என்னிடம் நின்று கொண்டிருந்தது. அக் கேள்வியிடம் நான் கேட்ட கேள்வி என்னவென்றால்ஏன் ஒரு வயதுக்கு வந்த இளைஞன் தன் உடல் அமைப்பு ஏற்படுத்தும் தூண்டல்களுக்கு ஏற்ப செயல் பட கூடாதா?  என்ன நம் கலாசாரம் , என்ன நம் பண்பாடு? அவன் என்ன கொலையா செய்தான்? பெண்ணைத்தானே ரசித்தான். கற்பு? அழிக்கவில்லையே.  அபெரியவர் ஏன் அப்படி கடிந்து கொண்டார்?அவன் அவனுடைய வழிப வயதில் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகத்தானே செய்தான்.இச் சிர்ரோன்மநிகளை சைட் அடிக்காமல் இருந்திருந்தால் தானே அப் பெரியவர் கவலை பட்டிருக்கவேண்டும். அவனை மருத்துவ பரிசோதனைக்கு உட் படுத்தியிருக்க வேண்டும்.

 ஹார்மோன் சரியாக வேலை செய்கிறதா? என்று பார்க்க.

 

ஆனால் நம் கலாசாரம் எப்படி ஒரு சராசரி மனிதனை அவன் இயல்புகளை கட்டுப்படுத்துகிறது. இக் கட்டுப்படுத்தல்களால்தானே மன நோயும் பாலியல் வக்கிரங்களும் தோன்றுகிறது.

 

ஹார்மோன் சரியா வேல செய்யுது வாலிப வயசு சைட் அடியுங்கள் தப்பில்லை. நம் கலாச்சாரம் ஒன்றும் தேய்ந்துவிடாது.   

பின்னூட்டமொன்றை இடுக