பங்குசந்தையும் ஆடித்தள்ளுபடியும்

 The maximum pessimism is right time to buy.
 The maximum optimism is right time to sell.

 

 ” வாங்கவும்  விற்கவும் கற்றுக்கொள் ”
   என்ற கோஷம் வந்ததென்னவோ உண்மைதான்!
   நாம் வாங்கவும் விற்கவும் ஆரம்பித்தோம் ;
   நாம் கற்றுக்கொண்டோம்.

 

 

செல்லமுத்து குப்புசாமி நகைசுவைக்காக சொல்வார்.

 ” என்னங்க துணிக்கடையில ஆடி தள்ளுபடின்னா மக்கள் ஒடி ஒடி வாங்குகிறார்கள். பங்கு சந்தையில் விலை குறைந்து இருந்தால் மட்டும் மக்கள் வாங்க தயங்குகிறார்கள்.” என்று.

உண்மைதான் மக்கள் தங்கள் அறியாமையினால் பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்து பின்பு விழி பிதுங்குகிறார்கள்.

 

வளத்தப்ப செட்டியார் தன் தனவணிகன் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்எதையும் புரிந்து கொண்டு செய்ய வேண்டும்என்று.உண்மைதானே.பெண் பார்க்க போனால் அப்பெண்ணின் குளம் கோத்திரம் முதல் பார்க்கிறோம்    அது போல பங்கு வாங்கும் போதும் பங்குகள் குறித்தும் அதன் விலை குறித்தும் அலசி ஆராய வேண்டாமோ? பங்குகளின் விலை உயர்கிறது என்ற உடன் இத்தனை நாள் எதையோ இழந்தவர்களை போல அல்லவா ஒடி சென்று பங்குகளை ஆராயாமல் வாங்குகிறோம். அப்படி அல்லாமல் சில சிறிய ஆராய்ச்சிசிகளை பங்கு சந்தை குறித்தும், நிறுவனங்கள் குறித்தும் செய்ய வேண்டியுள்ளது.

 

 நிறுவனத்தின் விலையையும் ,பங்குசந்தை குறித்தும் ஆரயிசிகளை எப்படி செய்ய வேண்டும் என்று பெஞ்சமின் கிரகாம் கூறியுள்ளார்.திரு. கிரகாம் அவர்கள் திரு. வாரன் பபட் அவர்களின் ஆசான் ஆவார்.அந்த தத்துவத்தை பற்றி அறிய திரு . செல்லமுத்து குப்புசாமி எழுதியஇழக்காதேபுத்தகத்தை பணம் கொடுத்து வாங்கிபடியுங்கள்.

 

பெஞ்சமின் கிரகம் கூற்றுபடி கீழ்கண்ட நிறுவனங்களை கீழ்கண்ட விலைகளில் வாங்கலாம்.

 

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்ஜூன்) சோப்பு , டிடர்ஜண்டுகள், பற்பசை, சாம்பூ, உள்ளிட்ட அன்றாடம் பயன்படும் நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனக்களின் நிகர இலாபம் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டை காட்டிலும்

18 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெயவித்து உள்ளனர்.இன் நிறுவனக்களால் ஈட்டப்படும் வருவாயும் 16 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்க படுகிறது. இதே போன்று மருந்து துறை நிறுவனங்களின் வருவாயும் நிகர லாபமும் சிறப்பான அளவில் முன்னேற்றம் அடையும் என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.  மூலப்பொருள் விலை அதிகரிப்பால் நிறுவனங்களின் உற்பத்தி செலவு உயர்ந்து வருகிறது .

 

இத்தனை எதிர் கொண்டு லாப வரம்பை உயர்த்துவதற்காக நுகர்பொருள் நிறுவனக்கள் நுகர்பொருள் விலையை உயர்த்தியுள்ளன.இந்த விலை உயர்வை வடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுதல் உள்ளிட்ட சந்தைபடுத்துதல் உள்ளிட்ட சந்தை படுத்துதல் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொண்டுள்ளன.செயல்பாட்டு செலவினத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளன.இது போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணை

விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் நுகர்பொருள் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நன்றாக இறுக்கம் என எதிர்பார்க்கபடுகிறது.

 

 இதே போன்று இந்திய மருந்துத்துறை நிறுவனங்களால் ஈட்டப்படும் நிகரலாபமும் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் சென்ற ந்தியான்டின் முதல் காலாண்டில் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டிக்காடிலும் 17.5 சதவீதம் அதிகரிக்கும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

 

மருந்து துறை நிறுவனக்கள் ஏற்றுமதி மூலமே 50 சதவிகிதம் லாபம் ஈட்டுகின்றது .  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியபன மதிப்பு 6 சதவீதம் சரிவடைந்து உள்ளது. மருந்து துறை நைருவனக்களின லாபம் அதியாரிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு  சான்று. இதே போன்று உள்நாட்டு சந்தியிலும் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும் என்று நம்ம்பபடுகிறது. இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் மருந்துகளை அறிமுகம் செய்ய கிடைத்த உரிமங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இனி நிறுவனத்த்தின் விலையும் நிறுவனங்களும். 

 

இவை அனைத்தும் நீண்டகால முதலீட்டுக்காக

 

நிறுவனம்                            வாங்கும் விலை

 

HUL                                                     75 TO 100

 

ITC                                                      50  T 60

 

SUN PHARMA                                   275 TO 300

 

CIPLA                                                 60 TO 75

 

மேற் சொன்ன விலைகள் வந்தால் வாங்குங்கள் இல்லை எனில் விட்டுவிடுங்கள்.

 

மேற் சொன்னவை அனைத்தும் எனது யூகம்.முதலீட்டாளர்கள் தாங்கள் சொந்தமாக முடிவேடுத்துக்கொள்ளவும்.