சூபி ஞானி சையது பாசுமியான் அவுலியா

 சூபி ஞானிகளின் தேடல்களின் வரிசையில் அடுத்து நான் தேடிக் கண்டடைந்ததுஞானி சையது பாசுமியான் அவுலியா ஆவார்கள்.அவரை மஸ்தான் என்றும் அழைப்பது உண்டு.

அவர் கரூரில் மாவடியான் கோவில்  தெருவில் அடங்கியுள்ளார்கள். ஒரு முப்பது வருடங்களாக கரூரிலேயே இருக்கும் எனக்கு இந்த பாவாவை பற்றி தெரியாமலிருந்தது. நண்பர் ஷேக் அவர்களின் மூலமே நான் பாவாவை அறியமுடிந்தது. நண்பர் ஷேக் அவர்களுக்கு எனது நன்றி. 

ஆடிக்கார்று அடிக்கும் மாலை நேரத்தில் வியாழக்கிழமை  ஒன்றில்  தர்ஹாவிர்க்கு நானும் நண்பர் கார்த்தியும் ஊதுபத்தி , நாட்டு சக்கரை , பொட்டுக்கடலை எலுமிச்சம்பழம்  ஆகியவைகளை தர்ஹாவிர்க்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் வாங்கிக்கொண்டு சென்றோம்.  தர்ஹா ஒரு சின்ன சாந்தினுள் ஒரு வீட்டை போல இருந்தது.  நானும் நண்பர் கார்த்தியும் தர்ஹாவில் நுழைந்ததும் எங்கும் ஊதுபத்தி வாசனை நிரம்பியிருந்தது.

ஒரு வயதான பெண்மணி தொழுகையில் ஈடுபட்டு இருந்தார்.  பாவாவின் சமாதியின் மீது பச்சை துணி போர்த்தி மூடப்பட்டு இருந்தது, சமாதியின் மீது வாள் வைக்கபட்டிருந்தது.நாங்கள் பாவாவின் சமாதியின் முன்பு அமர்ந்திருந்தோம்.அப்போது அந்த வயதான பெண்மணி தொழுகையை முடித்துவிட்டு  வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது நாங்கள் பாவாவின் திருவிளையாடல் கதை ஒன்றை அப்பெண் சொல்லக்கேட்டோம்.

சுமார் ஒரு முன்னுரு வருடங்களுக்கு முன்பு கரூர் மாவடியான் கோவில் தெருவில் மகான் சையது பாசுமியான் அவுலியா அவர்கள் வாழ்ந்து வந்ததாக சொன்னார் . அவர் பல சித்து வேலைகள் மூலம் மக்களின் குறைகளை தீர்த்துவந்துள்ளார்கள்

பாவா ஒருமுறை நாமக்கல்லில் உள்ள உறவினர்களை காண செல்லும்போது பரிசல் காரன் அவரை காசு இல்லாமல் பரிசலில் ஏற்ற மறுத்து விட்டானாம். மட்டுமல்லாமல் பாவாவை திட்டிவிட்டும் பரிசலை ஓட்டிசென்று விட்டானாம்.

அப்போதோ நடு ஆற்றில் பரிசல் ஒரு சுழலில்சிக்கிகொண்டது மக்கள் கதறுகிறார்கள் பரிசல் காரன் நீந்தி தப்பித்துவிட்டான். இதனை அறிந்த பாவா தண்ணீரின் மீது நடந்து சென்று மக்களை மீட்டார்களாம். மக்களின் அடியிலிருந்து பரிசல் காரனையும் மீட்டாராம். அதனை போல பாவா நம்மையும் இந்த வாழ்க்கை என்னும் சுழலில் இருந்து காப்பாற்றுவாராக..    .

பின்னூட்டமொன்றை இடுக