அதிர்ஷ்ட்டசாலிகளும் தூய்மையான மேடையும்

திருடவில்லை;கைப்பற்றினார்கள்.நமது
மூதாதையர்கள் இதற்காக இரத்தம் சிந்தினார்கள்.
அதனால் தான் போலும் பூமி இவ்வளவு
கறுப்பாக இருக்கிறது .

அண்மையில் கரூரில் நடந்த ஒரு புத்தக வெளயீட்டு விழாவிற்கு என்னை பேச அழைத்திருந்தனர். எனக்கு எப்போதுமே ஒரு விழாவிற்கு செல்லும் பொழுது மேடை தூய்மையானதாக இருக்க வேண்டுமே என்று படபடப்பாக இருக்கும்.பல முறை மேடை அசுத்தமானதாக இருக்கும்.பல முறை மேடை தூய்மையானதாக இருக்கும்.

அதை போல புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்த பொழுது மேடை மிகவும் தூய்மையானதாக இருந்தது.எனக்கு மகிழ்ச்சியாக  இருந்தது.எந்த துர்நாற்றமும்
இல்லாமலிருந்தது. இதனால் எந்த சங்கோஜமும் இல்லாமல் என்னால் மேடையில் அமரமுடிந்தது.புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது. பிறகு என்னை பேச அழைத்தார்கள்.

 நான் பேச்சை பின் வருமாறு துவக்கினேன்,” இந்த தூய்மையான மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும், மற்றும் இவ் விழாவிற்கு வருகைத்தந்த அதிர்ஷ்ட்டசாளிகளுக்கும் வணக்கம்” என்று.

அனைவரும் நினைத்தனர் ” இவர் அதாவது நான் மேடை தூய்மையானதாக உள்ளது என்பதற்காகவும் இந்த அறிய நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால் நம்மை அதிர்ஷ்ட்டசாலிகள் எனவும் இவர் கூறுகிறார்” என்று

நான் கூறினேன் ,” நீங்கள் இந்த மேடை சுத்தமானதாக உள்ளது என்பதனாலும் இந்த அரிய விழாவிற்கு வந்ததனாலும் தான் இவர் இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்துக்கொண்டால் அது தவறு

அதிஷ்ட்டசாலிகளும் தூய்மையான மேடையும் இதற்க்கு மேற்சொன்னது அர்த்தம் ஆகாது. இதற்க்கு அர்த்தத்தை நான் இங்கு கூறமாட்டேன்.இதற்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் நீங்கள் என் வலைப்பூவிர்ர்க்கு வந்து பாருங்கள். அர்த்தம் அங்கு உள்ளது.

அதற்கான விளக்கம் இப்போது தருகிறேன்.அதிர்ஷ்ட்ட சாலிகள் என்பதற்கு அர்த்தம் அவ்வரிய விழாவிற்கு வந்ததினால் அல்ல. பின் என்ன என்றால், நம் கேடு கெட்ட ஊழல் நிறைந்த அரசியல் வாதிகளால்நாம் தினமும் செத்து செத்து பிழைக்கிறோம். சாலையில் வரும்பொழுது ஏற்படும் பொகுவரரத்து நெரிசலில் சிக்கி மாண்டு போகாமலும் தெரு நாய்கள் கடிக்காமலும் அல்லது நம் வாகனத்தில் நாய்கள் வந்து விழுந்து நம்மை விபத்துக்குள்ளாக்காமலும் இவ்வாறு நடக்காமல் ஒரு இடத்திற்கு நாம் பத்திரமாக பொய் சேர நமக்கு அதிர்ஷ்ட்டம் தேவைப்படுகிறது.இந்த அதிர்ஷ்டம் என்பது நமது பகுத்தறிவுக்கு ஏற்புடையதா? அல்லவா? என்பதல்ல நமது தற்போதைய விளக்கம்.பின் என்னவென்றால் அதிர்ஷ்ட்ட சாலிகள் என்பதை விளக்க மாட்டும்தான்.இதனால் தான் நான் அங்கு வந்து இருந்தவர்களை அதிர்ஷ்ட்டசாலிகள்  என்றேன்
மற்றொன்று தூய்மையான மேடை . இது என்னவென்றால் ” அரசியலை நாம் என்ன சொல்கிறோம்? அது ஒரு சாக்கடை என்று தானே? சாக்கடையில் என்ன இருக்கும் பன்றிகள் தானே இருக்கும். ஆனால் அந்த மேடையில் ஒரு பன்றிகள்  கூட இல்லை அதாவது ஒரு அரசியல் வாதிகள் கூட இல்லை. அதனால் தான் தூய்மையான மேடை என்று அன்று கூட்டத்தில் பேசினேன்.

இப்பொழுது புரிகிறதா?அதிர்ஷ்ட்டசாளிகளும் தூய்மையான மேடையும் என்பதற்கான அர்த்தம்.

2 பின்னூட்டங்கள்

  1. Sudha said,

    ஜூலை 24, 2008 இல் 11:56 முப

    Sir,

    I read all your comments, Pls keep it up

  2. chinnathampi said,

    ஜூலை 24, 2008 இல் 2:38 பிப

    திரு சுதா, என் வலைப்பூவிற்கு வந்ததற்கு மிக்க நன்றி.
    பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிசெய்கிறேன்.


பின்னூட்டமொன்றை இடுக